Our Services
- Home
- Our Services
- Neyyaa Trust
Our Services
குருகுலம்
குதிரை தாண்டு நமது பாரம்பரிய விளையாட்டுகளாக தாயம், பல்லாங்குழி, பரமபதம், நொண்டி, கண்ணாமூச்சி, பச்சை குதிரை தாண்டுதல், பம்பரம், கோலிகுண்டு, கிட்டி அடித்தல் இது போன்ற நமது குழந்தைகள் விளையாட மறந்த விளையாட்டுகளை விளையாட செல்போன்களில் செய்து ஏனென்றால் விளையாடுவதால் இதனால்தோல்வி பயம் மற்ற குழந்தைகளோடு இணைந்து விளையாட்டு இல்லை விட்டு கொடுக்க்கும் மனம் இல்லை. இதிலிருந்து குழந்தைகளை மீட்க நமது விளையாட்டுகளை மீண்டும் விளையாட செய்வதால் குழுவாக இணைந்து விளையாடுதல், பரமபதம் பாம்புகளில் பட்டாலும்,துவண்டுவிடாமல் ஏணி மேல் கடி ஏறி செல்வது பல்லாங்குழி ஒவ்வோரு குழிகளுக்கும் ரா இல்லை பகர்ந்தளிப்பது. சேமிப்பு என்ற குணம். ஒருகாலோ கண்ணோ இல்லையென்றாலும் சமாளிக்க நொண்டி கண்பொத்தி விளையாட்டுகள் பச்சைகுதிரை தாண்டுதலே HIGH JUMB, கிட்டியடித்தல், கிரிகெட் தவரவிடாமல் பம்பரத்தை சுற்றுதல் என 150க்கும் மேற்பட்ட குழந்தைகளை மீட்டு கொண்டுவந்தோம்.
அட்சயஜோதி அன்னதானத்திட்டம்
அட்சயஜோதி அன்னாதான திட்டத்தின் மூலம் தெருவோரம் இருக்கும் ஆதாவற்றவர்களுக்கு உணவு வழங்கி வந்தோம் தற்போது மருத்துவமணையில் நோய்வாய்ப்பட்டவர் 20 முதல் 30 பேர்களுக்கு உணவு வழங்கி வருகின்றோம். அவர்கள் கண்ணீரோடு அதை வாங்கி உண்பதை கண்டு மிகவும் மனவேதனை அடைகின்றோம்.
சிங்கபெண்கள் இயக்கம்
வசதியானவர்களை வைத்து சிங்க பெண்கள் இயக்கத்தை துவங்கவில்லை.
வாழ்க்கையில் பல்வேறு கடினமான சூழ்நிலையில் வாழும் பெண்களை இணைத்து சிங்க பெண்கள் என்ற இயக்கதைத் துவங்கினோம். அவர்கள் கணவரை இழந்தவர்கள் கணவரால் கைவிடப்பட்டவர்கள், கலப்பு திருமணம் புரிந்தவகள், மாற்று திறனாளிகள் என 56 பேர்கள் இதில் தற்போது உள்ளனர். இந்த சிங்க பெண்கள் திருக்கோவில்களில் அறப்பணிகளை மேற்கொள்ளாவும். மாணவ மாணவியர்களுக்கு பள்ளிகளில் கவுன்சிலிங் கொடுக்கவும். பெண்களுக்கு சிறுதொழில் பயிற்சியளிப்பது அவர்களின் பொருள்களை சந்தைப்படுத்துவதும் பெண்களை தொழில் முணைவராக மாற்றி பொருளாதாரத்தை உயர்த்துவது இலவச சட்ட ஆலோசனை வழங்குவது பொன்ற சேவைகள் செய்கிறோம்.
யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி
குழந்தைகளுக்கு யோகா மற்றும் தியானம் போன்றவைகளை கற்பிப்பது. அதன் மூலம் பல்வேறு உடல் உபாதைகளில் இருந்து காப்பது. குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் கற்பித்தல், அவர்களுக்கு போட்டிகள் வைத்து பரிசுகள் அளிப்பது, மற்ற நிறுவனங்களில் நடைபெறும் போட்டிகளில் அவர்களைப் பங்கேற்க வைப்பது.
மாலை நேர இலவசகல்வி
வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் பகுதிகளில்
குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் இலவச கல்வி 4 இடங்களில் அளித்தோம். 60 மாணவர்கள் பயின்று வந்தார்கள்.
சிறுவர்களுக்கு திறன் ஊக்குவிப்புபோட்டி
குழந்தைகளுக்கு ஓவிய பயிற்சி, மாறுவேட போட்டி மற்றும் வீட்டில் உபயோகமில்லாமல் இருக்கும் பொருட்களை கொண்டு கற்பனை திறனில் பல்வேறு உபயோகமான பொருள்களாக உருவாக்குவது போன்ற போட்டிகளை வைப்பது அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வருடாந்தோரும் அளித்து வருகின்றோம். இதில் 60 மேற்பட்ட மாணவமாணவிகள் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர்.